நேதிக்கு Past Lives (2023) படம் பாதுண்டு இருகும்பொழுது அஃசாபுதைல ஐசுலான்டு கலைஞர் Olafur Eliassonனின் ஒரு கலை கன்காட்சி நடக்கிரதுனு நியாபகம் வந்துது. அடுத்த 2 நிமிஷதுல டிகெட்ட onlineல வாங்கினேன்.
என் பீனிய காதுவரைகும் இழுதுக்கொண்டு அஃசாபுதைகு சென்றேன். சமீபத்தில் கட்டின அஃசாபுதை ஹில்ஸின் கலை கண்காட்சியகத்தின் தொடக்கவிழாவாக பிரபல கலைஞர் Olafur Eliassonனை அழைத்து, அவரின் சில கலைப்பொருட்களை தொகுத்துவழங்கியுள்ளார்கள். இக்கலை கண்காட்சிக்கு Eliasson, A harmonious cycle of interconnected nows என்று பெயர்வைத்துள்ளார்.
Eliassonனை முதலில் Netflixயின் Abstract: The Art of Design என்ற டாக்குமெண்டரரியில் பார்த்தேன். ஆவர் பெரும்பாலும் விதவிதமான வடிவங்களைக்கொன்டு கலைஉறுவங்கலளை உண்டாக்குவது வியப்புக்குறியது.
2001யிலிருந்து 2023வரை அவர் செய்த கலைபொருட்களை இக்கண்காட்சியகத்தில் காண்பித்துள்ளார்கள். அவர் செய்த வரைபடங்களிலும் மற்ற கலைபொருட்களிலும் Generative Art என்னும் கலைவகையின் உத்வேகத்தை நன்கு கவணித்தேன். Generative Art என்ற கலையில், பேருக்கேற்பாற்போல், வடிவங்களும் அவையால் தன்யிஷ்ட்டம்போல் மருவும் விசைவீச்சுப்பாதைகளும் தான் பிரதானம்.

Fujifilm X-S20 | f/3.5 | ISO 800

Fujifilm X-S20 | f/4 | ISO 800

Fujifilm X-S20 | f/3.6 | ISO 500
காண்பிக்கபட்ட கலைபொருட்களில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது என்றால் அது கண்டிப்பாக Your split second house (2010) தான். அதில், தண்ணி வரும் tubeகளை தொங்கவிட்டு, அதன் ஒரு முனயில் அசைத்து, tubeகளை அவைபோக்கில் ஆடவிட்டுள்ளார். இந்த எளிய அமைப்பு chaotic பாதைகளை உருவாக்கும். தண்ணித்துளிகள் அப்பாதைகளை சுட்டிக்காட்டும் வண்ணம் தெளிப்பதை flickering lightsஐ கொண்டு ஃபோடொ எடுப்பது மாதிரி காடிருந்தார். சற்று உட்கார்ந்து இயற்கை தரும் வெவ்வேறு பாதைகலை மெய்மறந்து பார்த்தேன்.

Fujifilm X-S20 | f/4.2 | ISO 12,800

Fujifilm X-S20 | f/4.2 | ISO 12,800

Fujifilm X-S20 | f/4.2 | ISO 12,800
ஓரு full-body experienceஐ தரும் கோணத்தில் போகும் சமீப கலைவடிவங்கள் இன்னும் எத்தனை நாள் தான் Gallery மற்றும் Museumகளில் காட்டுவார்கள்? Apple Vision Pro, Meta Quest போன்ற AR/VR கேஜெட்கள் சுமார்ட்ஃபோன் மாதிரி சாமானியமாகும் இக்காலத்தில் Galleryயின் தேவை என்ன? Experienceஐ தரும் கலைபொருட்களுடன் இன்டெராக்ட்டு பண்ணமுடியாத பொழுது, Galleryகள் கலைபொருட்களின் மயானமெ. இந்த எண்ணங்களுடன் வீடு திரும்பினேன்.